ted-baker-telbaa-splendour-print-cover-up/

பேக்கர் தீவு ஒரு வாழ்வோர் இல்லாத நிலநடுக்கோட்டிற்கு சற்றே வடக்கே மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைத் திட்டாகும்.இது ஹொனலுலுவிலிருந்து 3,100 கி.மீ தொல…
பேக்கர் தீவு ஒரு வாழ்வோர் இல்லாத நிலநடுக்கோட்டிற்கு சற்றே வடக்கே மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைத் திட்டாகும்.இது ஹொனலுலுவிலிருந்து 3,100 கி.மீ தொலைவில் உள்ளது. ஹவாய், ஆஸ்திரேலியாவிற்கு இடையே சரிபாதி தொலைவில் உள்ள இந்தத் தீவு அமெரிக்க ஆளுமையின் கீழ் உள்ளது.இதன் அண்மையில் உள்ள தீவு வடக்கே 68 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஹவுலாந்து தீவு ஆகும். இதன் பரப்பளவு 1.64 சதுர கிலோமீட்டர்கள் ; கடற்கரை நீளம் 4.9 கிலோமீட்டர்கள். வானிலை நிலநடுக்கோட்டு வலயத்தில் உள்ளதாகும். குறைந்த மழையும் நிறைந்த காற்றும் கூடுதல் சூரிய ஒளியும் மணற்பாங்கான இத்தீவில் நிலவுகின்றன.
தரவை வழங்கியது: ta.wikipedia.org